முகப்புகோலிவுட்

ஜூனியர் என்.டி.ஆரின் ‘அரவிந்த சமேதா’ பட டிரெய்லர்

  | October 02, 2018 20:26 IST
Junior Ntr

படத்தை அக்டோபர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

டோலிவுட்டில் ‘ஜெய் லவ குசா’ படத்திற்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் கைவசம் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸின் ‘அரவிந்த சமேதா’ மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கவிருக்கும் புதிய படம் உள்ளது. இதில் ‘அரவிந்த சமேதா’ படத்தை ‘ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இது ஜூனியர் என்.டி.ஆரின் கேரியரில் 28-வது படமாம்.

இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே டூயட் பாடி ஆடி வருகிறார். இன்னொரு நாயகியாக ஈஷா ரெப்பா நடிக்கிறார். மேலும், முக்கிய வேடங்களில் ஜெகபதி பாபு, நாக பாபு, சுனில் ஆகியோர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்கிறார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, படத்தின் டிரெய்லரை ஜூனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது. படத்தை அக்டோபர் 11-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்