முகப்புகோலிவுட்

ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர்

  | September 12, 2018 00:16 IST
Jyothika

துனுக்குகள்

  • பிசியான நடிகையாக மாறிவிட்டார் ஜோதிகா
  • CCV, காற்றின் மொழி என அடுத்தடுத்த படங்கள் தயார்
  • அடுத்ததாக அறிமுக இயக்குநர் படத்தில் நடிக்கிறார்
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவுடனான காதல் திருமணத்திற்குப் பிறகு நடிப்பில் இடைவெளிவிட்டு மீண்டும் 36 வயதினிலே படம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

தொடர்ந்து பிரம்மா இயக்கிய `மகளிர் மட்டும்' பாலா இயக்கிய `நாச்சியார்' ஆகிய படங்களிலும் நடித்து மீண்டும் பிசியான நடிகையாக வலம் வரத் துவங்கினர். தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள `செக்கச்சிவந்த வானம்' படத்திலும், ராதா மோகன் இயக்கியுள்ள `காற்றின் மொழி' படத்திலும் நடித்துள்ளார்.
 
இதனையடுத்து `ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்குகிறார். அடுத்த மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது எனவும் மற்ற நடிகர்கள் தொழிநுட்ப கலைஞர்கள் பற்றிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்