முகப்புகோலிவுட்

ஜோதிகாவின் 'காற்றின் மொழி' அசத்தலான அப்டேட்

  | August 04, 2018 13:28 IST
Kaatrin Mozhi

துனுக்குகள்

  • ஜோதிகா கைவசம் 'செக்கச்சிவந்த வானம், காற்றின் மொழி' ஆகிய 2 படங்கள் உள்ளது
  • ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக் தான் 'காற்றின் மொழி'
  • இப்படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
பாலாவின் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கைவசம் மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் வெளிநாட்டு விநியோக உரிமையை ‘MSK ஃபிலிம் கார்ப்ரேஷன்’ நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்