முகப்புகோலிவுட்

துவங்கியது ஜோதிகாவின் 'காற்றின் மொழி' பட ஷூட்டிங்

  | June 04, 2018 12:28 IST
Jyothika Womencentric Film

துனுக்குகள்

  • ஜோதிகா கைவசம் 2 படங்கள் உள்ளது
  • இது ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம்
  • ஒரே ஷெடியூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்
‘மகளிர் மட்டும்’ படத்திற்கு பிறகு ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து ஜோதிகா கைவசம் மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ என 2 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம்.

வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கவுள்ளார். நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடிக்கவுள்ளனர்.
 
ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கவுள்ள இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்யவுள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றவுள்ளார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். தற்போது, படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் இன்று (ஜூன் 4-ஆம் தேதி) முதல் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஷெடியூலில் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்