முகப்புகோலிவுட்

'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடிய ஜோதிகா

  | August 03, 2018 15:13 IST
Jimikki Kammal Song

துனுக்குகள்

  • இது 'துமாரி சுலு' எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம்
  • இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது
  • 'வெளிபாடிண்டே புஸ்தகம்’ படத்தில் வந்த 'ஜிமிக்கி கம்மல்’ பாடல் வைரலானது
பாலாவின் ‘நாச்சியார்’ படத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா கைவசம் மணிரத்னமின் ‘செக்கச்சிவந்த வானம்’ மற்றும் ராதாமோகனின் ‘காற்றின் மொழி’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காற்றின் மொழி’ படம், ‘துமாரி சுலு’ எனும் ஹிந்தி படத்தின் ரீமேக்காம். வித்யா பாலன் நடித்திருந்த ‘துமாரி சுலு’, பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை ‘கிரியேட்டிவ் என்டர்டைனர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கிறார். நேஹா தூபியா கேரக்டரில் லக்ஷ்மி மஞ்சுவும், மனவ் கௌல் கதாபாத்திரத்தில் விதார்த்தும் நடித்துள்ளனர். சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். ஏ.ஹெச்.காஷிப் இசையமைக்கும் இதற்கு மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன்.கே.எல் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார், பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.

இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘வெளிபாடிண்டே புஸ்தகம்’ என்ற மலையாள படத்தில் ஃபேமஸான ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் இந்த படத்தில் இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு ஜோதிகா, லக்ஷ்மி மஞ்சு நடனமாடுவது போல் காட்சியமைக்கப்பட்டுள்ளதாம். படத்தை அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். வெகு விரைவில் டிரெய்லர் & ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்