விளம்பரம்
முகப்புகோலிவுட்

மணிரத்னம் இயக்கத்தில் ஜோதிகா

  | September 08, 2017 10:33 IST
Jyotika Next Film

துனுக்குகள்

  • ‘மகளிர் மட்டும்’ வருகிற செப்டெம்பர் 15-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது
  • இதில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்
  • ஜோதிகா நடித்த ‘டும் டும் டும்’ படத்தை மணிரத்னம் தயாரித்திருந்தார்
’36 வயதினிலே’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜோதிகா கைவசம் பிரம்மாவின் ‘மகளிர் மட்டும்’, பாலாவின் ‘நாச்சியார்’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘மகளிர் மட்டும்’ வருகிற செப்டெம்பர் 15-ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. ‘நாச்சியார்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறதாம். தற்போது, ஜோதிகா மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, மணிரத்னம் தயாரிப்பில் வெளியான ‘டும் டும் டும்’ படத்தில் ஜோதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ஹீரோவாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய வேடங்களில் நடிக்க அரவிந்த் சாமி, துல்கர் சல்மான், ஃபகத் ஃபாஸில் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் கூறப்பட்டது.

இயக்குநர் மணிரத்னமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ மூலம் தயாரிக்கவுள்ள இதற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்