முகப்புகோலிவுட்

சவுதி அரேபியாவில் ரஜினியின் ‘காலா’ செய்த சாதனை

  | June 07, 2018 14:37 IST
Kaala

துனுக்குகள்

  • இப்படம் சூப்பர் ஸ்டாரின் கேரியரில் 164-வது படமாம்
  • பல ஆண்டுகளாக சவுதி அரேபியாவில் திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தத
  • கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன
‘கபாலி’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் இன்று (ஜூன் 7-ஆம் தேதி) ரிலீஸாகியுள்ள படம் ‘காலா’. இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படம் சூப்பர் ஸ்டாரின் கேரியரில் 164-வது படமாம். இதனை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் மூலம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நானா படேகர், ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளர்.

இந்த படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பல ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சவுதி அரேபியாவில், கடந்த ஏப்ரல் மாதம் முதல் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில், சவுதி அரேபியாவில் ‘காலா’வும் வெளியாகி, அங்கு ரிலீஸான முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்