முகப்புகோலிவுட்

'காலா' படத்தின் ‘தெருவிளக்கு’ பாடல் மேக்கிங் வீடியோ

  | June 06, 2018 17:09 IST
Rajinikanth

துனுக்குகள்

  • ரஜினி – பா.இரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள 2-வது படம்
  • இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை நாளை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்
‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’, பா.இரஞ்சித்தின் ‘காலா’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என 3 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர் நானா படேகருக்கு வில்லன் கதாபாத்திரமாம். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவாளராகவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராகவும், த.ராமலிங்கம் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர். சமீபத்தில்,வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். படத்தை நாளை (ஜூன் 7-ஆம் தேதி) ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம். தற்போது, படத்தில் இடம்பெறும் ‘தெருவிளக்கு’ பாடலின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்