முகப்புகோலிவுட்

காலா பாட்ஷாவின் தழுவலா? விவரிக்கிறார் வின்சிராஜ்

  | June 02, 2017 16:23 IST
Celebrities

துனுக்குகள்

  • இயக்குனர் ரஞ்சித் மிகவும் மிகவும் பொறுமைவாய்ந்தவர்
  • அறிமுக இயக்குநர்களுடன் பணிபுரிவதை விரும்புகிறேன்
  • தாராவி மக்களின் வாழ்வியல் தான் காலா
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திரைப்படம் வெளியானால் அதற்க்கு முன்பு டிரையிலர் மற்றும் பாடல் வெளியீடும் கலாச்சாரம் மட்டுமே வழக்கத்திலிருந்து வந்தது. ஆனால், தற்பொழுது சற்றே ஒரு படி மேலே சென்று படத்தின் ஒரு முக்கிய காட்சியையே வெளியிடும் அளவிற்கு திரைத்துறை மாற்றம் அடைந்துள்ளது. இவை அனைத்திற்கும் முக்கிய நோக்கமே ரசிகர்களுக்கு அப்படத்தின் மீதான ஆர்வத்தினை அதிகரிக்கவேண்டும் என்பது தான். இன்றைய தொழிநுட்பங்களையெல்லாம் தாண்டி திரைத்துறை தொடங்கிய காலத்திலிருந்து ரசிகர்களை திரையரங்கை நோக்கி அழைத்துவரும் ஒரு கலையை பற்றியது தான் இந்த இன்சைட் கோலிவுட் தொகுப்பு.
 

"என்ன தான் நாம இப்போ டீஸர், டிரைலர் பாத்தாலும், நம்ம படம்னு பாக்க ஆரம்பிச்ச காலத்துல இருந்து போஸ்டர்ஸ் தான் ரொம்ப பிரபலம். அப்போ இருந்து இப்பவர போஸ்டர் டிசைன்க்கு இருக்க மவுசு குறையவே இல்ல. பைக்ல டிரைவ் பண்ணும்போது, பஸ்ல போகும்போது, சிக்னல்ல நிக்கும்போது நம்ம கண்ல படும் படத்தோட போஸ்டர் தான் அந்த படத்த பத்தின ஆர்வத்த நமக்குள்ள அதிகமா ஏற்படுத்தும். பிலிம் போஸ்டர மக்களோட மக்களா நிறைய இடங்கள்ல பாக்கலாம், அதுக்குன்னு தனியா ஒரு மீடியம் தேவையில்ல. ஒரு படத்த பத்தின டீடெயில்ஸ எல்லா சென்டர் ஆடியன்ஸுக்கும் ஈஸியா கொண்டுபோய்சேக்குறதுல பிலிம் போஸ்டர்ஸோட பங்கு ரொம்பவே அதிகம்" என்று சிரித்தபடியே திரைப்படங்களில் போஸ்டர் டிசைனின் முக்கியத்துவம் குறித்து வின்சிராஜ் நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

பெங்களூரில் மிகவும் பிஸியாக வலம்வந்துகொண்டிருந்தவர் ஒரு முக்கிய பணிக்காக சென்னை வர, அவரை அப்படியே அழைத்துவந்து ஒரு சின்ன கலந்துரையாடல்

நீங்க மிகக்குறைவான படங்கள்ல தான் ஒர்க் பண்ணிருக்கீங்க! இண்டஸ்ட்ரிக்கு வந்தது எப்படி?
 
vinciraj

"நான் படிச்சது எம்.பி.ஏ நல்லா படிச்சு முடிச்சேன். ஆனா ஒரு திருப்தியே இல்ல. அதுக்கு அப்புறம் தான் அட்வர்டைஸ்மென்ட் ஃ பீல்ட தேர்ந்தெடுத்து லொயோலால விஸ்காம்ல மாஸ்டர் டிகிரி பண்ணேன். சென்னைல படிச்சு முடிச்சு பெங்களூர்ல ஒரு அட்வர்டைஸ்மென்ட் பீல்டுல ஒர்க் பண்ணீட்டு இருந்தேன். அப்போ தான் என் ஃப்ரண்ட் மூலமா ரஞ்சித் பழக்கம் கிடைச்சது. அட்டக்கத்தி படத்துக்கு நான் தான் போஸ்டர் டிசைன் பண்ணணுன்னு ரஞ்சித் சொன்னாரு. ஆனா, அப்போ எனக்கு நம்பிக்கையே இல்ல. ரஞ்சித் ரொம்ப டைம் கொடுத்து, ரொம்ப சுதந்திரம் கொடுத்து அட்டக்கத்தி போஸ்டர் என்ன பண்ண வச்சாரு. டைம், பிரைவசி ஒரு டிசைனருக்கு ரொம்ப முக்கியம். அது ரஞ்சித்கிட்ட ரொம்பவே கிடைக்கும். சூப்பர்ஸ்டாரோட ஒர்க் பண்ணாலும் அப்ப பார்த்த அதே அட்டகத்தி ரஞ்சித் தான் இப்பயும்" என்று தன்னுடைய முதல் பட அனுபவத்தை நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.
உங்களுடைய ஒவ்வொரு போஸ்டர்லயும் ஒரு கான்செப்ட் இருக்கே எப்படி வின்சி?

மகிழ்ச்சியில் சிரித்தபடியே, "ரொம்ப நன்றி, எனக்கு 'ரெம்ப்ராண்ட் பெய்ட்டிங்ஸ்' மேல ரொம்ப ஆர்வம். அவரோட ஒவ்வொரு பெயின்டிங்சையும் எடுத்து நானே வரைஞ்சு பார்த்து சந்தோசப்பட்டுக்குவேன். அவரோட ஒவ்வொரு பெயிண்டிங்ஸ்லயும் நாம யோசிக்கிறமாதிரியான ஒரு விஷயம் இருக்கும். அந்த மாதிரியான ஒரு இம்பாக்ட் என்னோட போஸ்ட்டர்ஸ்லயும் இருக்கனுன்னு நினைப்பேன்" மீண்டும் அந்த புன்னகையோடே முடித்தார்.

கபாலி, இப்போ காலா அடுத்தடுத்து சூப்பர்ஸ்டாரோட ஒர்க் பண்றீங்க அந்த அனுபவம் எப்படி வின்சி?
 
kabali kaala

"கபாலிக்கு முன்னாடி வரை நான் ஒர்க் பண்ண எல்லாரும் டெபியூட் டைரக்டர்ஸ் தான். இப்ப வர என்னோட ஃ ப்ரெண்ட்ஸ், டெபியூட் டைரக்டர்ஸ்க்கு ஒர்க் பண்ணணுனா ரொம்ப பிடிக்கும். கபாலி படத்துக்கு நான் தான் போஸ்டர் டிசைன் பண்ணணுன்னு ரஞ்சித் சொன்னதும் ரொம்ப சந்தோஷமாவும் அதே நேரத்துல பயமாவும் இருந்தது அதனால என்னால முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். அதுமட்டுமில்லாம அந்த நேரத்துல எனக்கு பெரிய ஆக்சிடென்ட் ஆகி அப்ப தான் ரெக்கவர் ஆகிட்டு இருந்தேன். எனக்கு பண்ணுவேன்னு நம்பிக்கையே இல்ல ஆனா என்னால முடியுனு நம்பிக்கை கொடுத்து பண்ணவச்சாரு ரஞ்சித்"

கபாலி போஸ்ட்டர விட காலா போஸ்டர் ரசிகர்கள் மத்தியில சக்க போடு போடுது. ஒரே போஸ்டர்ல நெறய விஷயங்கள் இருந்தது. அது எல்லாமே பிளான் பண்ணி பண்ணதுதானா வின்சி?

ரஞ்சித் எங்கிட்ட ஸ்டோரி சொல்லிமுடிச்சதும் எந்த மாதிரி ஃபர்ஸ்ட்லுக் பண்ணலான்னு திங்க் பண்ணோம். பர்ஸ்ட் லுக்க பாக்கும்போதே இது எந்த மாதிரியான கதைக்களம்னு எல்லாருக்கும் புரியனுன்ற விஷயத்துல ரொம்பவே தெளிவா இருந்தாரு ரஞ்சித். ஒரு படம் தொடங்குறதே போட்டோஷூட்ல இருந்து தான். காலா படத்துக்கு போட்டோஷூட் பண்றதுக்கு முன்னாடியே என்ன என்ன விஷயங்கள் ஃபர்ஸ்ட்லுக்ல வரப்போதுனு பக்கவா பிளான் பண்ணிக்கிட்டோம். இது தாராவிய மையப்படுத்திய கதை என்பதால் அங்க இருக்க மக்களோட வாழ்வியல காட்டணும்னு தனியா ஒரு டீம தாராவி அனுப்பி எங்களுக்கு எந்த மாதிரியான போட்டோஸ் தேவையோ எல்லா போடோஸும் ரெடி பண்ணோம். நீங்க பார்க்கிற அந்த பர்ஸ்ட் லுக்ல மட்டும் கிட்டத்தட்ட 35 தனித்தனி போட்டோஸ் இருக்குன்னா நம்புவீங்களா!. படத்துல தலைவரோட பேரு காலான்றதால கருப்பு கலர்ல அவரோட காஸ்டியூம்ஸ் பிளான் பண்ணோம். அதுமட்டுமில்லாம தாராவி மக்களோட மக்களா, மக்களுக்கான ஒருத்தரா அவர குறிக்கிறது தான் அவர் பின்னாடி நிக்கிற நாயே தவிர இந்த படத்துக்கும், பாட்ஷா படத்துக்கும் எந்த கனேக்சனும் இல்ல. அந்த ஜீப் ஒரு ப்ரோபெர்ட்டி தானே தவிர அதுக்குன்னு எந்த காரணமும் இல்ல. இதுக்குமேல எந்த கேள்வியும் கேக்கமாட்டீங்கனு நினைக்கிறேன்" என்று நாம் கேள்வி கேட்பதற்கு முன்பே ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறி பெருமூச்சுவிட்டார்.

மேலும், "எல்லாரும் போஸ்ட்டர பாத்துட்டு பேசுற விஷயங்கள் ரொம்ப ஹாப்பியாவும் இருக்கு. அதே நேரத்துல நினைக்காத விஷயங்கள கூட கூர்மையா பாத்து சொல்லும்போது ரொம்ப ஆச்சர்யமாவும் இருக்கு" என்று கூறி புன்னகை செய்தார் வின்சி

காலா ஃபர்ஸ்ட் லுக் பாத்துட்டு தலைவர் என்ன சொன்னாரு வின்சிராஜ்?
 
rajinikanth vinciraj

"நான் போட்டோஷூட் முடிச்சுட்டு பெங்களூர் வந்துட்டேன். திடிர்னு ஒருநாள் ரஞ்சித் எனக்கு கால் பண்ணி ரஜினி சாருக்கு ஃபர்ஸ்ட் லுக் ரொம்ப பிடிச்சுருக்கு. ஃபர்ஸ்ட் லுக் பாத்துட்டு அவர் ரொம்ப ஹாப்பினு சொன்னதும் என்ன கைல பிடிக்க முடியல. இன்னும் இதே மாதிரி நிறைய போஸ்டர்ஸ் இருக்கு ஒவ்வொன்னா ரிலீஸ் பண்ணுவோம் வெயிட் அண்ட் வாட்ச்" என்று டாட் வைத்தார் வின்சி.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்