முகப்புகோலிவுட்

‘காலா’ படத்தின் அட்டகாசமான BGM டிராக் ரிலீஸ்!

  | June 14, 2018 13:07 IST
Kaala

துனுக்குகள்

  • சென்ற வாரம் வெளியான `காலா' நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது
  • இப்படத்தின் பின்னணி இசையும் அதிக பாராட்டுகளைப் பெற்றது
  • இதிலிந்து ஒரு OST ட்ராக் வெளியிடப்பட்டுள்ளது
சென்ற வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காலா’ திரைப்படத்தில் அதிகம் கொண்டாடப்பட்ட ஒரு விஷயம், படத்தின் பின்னணி இசை. எமோஷனல் காட்சிகளிலும் சரி அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும் சரி, சந்தோஷ் நாராயணனின் இசை மிக முக்கிய அங்கமாக இருந்தது.

படத்தின் OST டிராக் என சொல்லப்படும் பின்னணி இசை ரசிகர்களுக்காக மிக விரைவில் யூடியூபில் வெளியிடப்படும் என சொல்லப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று இப்படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான BGM டிராக் ஆன Rain Fight BGM ரிலீஸ் செய்யபட்டுள்ளது. ரஜினியின் அறிமுக காட்சியிலும், இடைவேளைக்கு முன் வரும் சண்டைக்காட்சியிலும் வேறு சில முக்கியமான காட்சிகளிலும் பின்னணி இசையாக இடம்பெறும் BGM இது.

 

திரையரங்கில் ரசிகர்களின் விசில்களை அள்ளிய இந்த BGM, தற்பொழுது ரசிகர்களுக்காக Wunderbar Studios யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்டுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்