முகப்புகோலிவுட்

‘காலா’ ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் டிவிட்

  | October 30, 2017 17:22 IST
Kaala Movie Updates

துனுக்குகள்

  • சூப்பர் ஸ்டார் கைவசம் ‘காலா, 2.0’ ஆகிய 2 படங்கள் உள்ளது
  • இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார்
  • ‘2.0’வின் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது

‘கபாலி’ படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கைவசம் ஷங்கரின் ‘2.0’ மற்றும் பா.இரஞ்சித்தின் ‘காலா’ ஆகிய 2 படங்கள் உள்ளது. இதில் ‘காலா’ ரஜினிகாந்தின் 164-வது படமாம். இதனை சூப்பர் ஸ்டாரின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வுண்டர்பார் ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கிறார். முக்கிய வேடங்களில் ஹூமா குரேஷி, இயக்குநர் சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர் மற்றும் பலர் நடிக்கின்றனராம்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இதற்கு முரளி.ஜி ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், ‘காலா’ டீமால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் மற்றும் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் அதிகரிக்கச் செய்தது. இதன் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளது.
 
இந்நிலையில், அடுத்த ஆண்டு (2018) ஜனவரி 25-ஆம் தேதி ரிலீஸாகவிருந்த ரஜினியின் ‘2.0’ தள்ளிப்போவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. ஆகையால், ‘காலா’ படத்தை பொங்கல் அல்லது அம்மாத (ஜனவரி) இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. தற்போது, பரவி வரும் இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘வுண்டபார்’ நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் “காலா பொங்கலுக்கோ அல்லது ஜனவரி மாதத்திலோ ரிலீஸாக வாய்ப்பு இல்லை” என ஸ்டேட்டஸ் தட்டியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்