முகப்புகோலிவுட்

பிரம்மாண்டங்கள் இணைந்து எளிமையாக வெளியிட்ட "காற்று வெளியிடை" பாடல்கள் மற்றும் டிரையிலர்

  | March 20, 2017 22:09 IST
Kaatru Veliyidai Songs

துனுக்குகள்

  • 25 ஆண்டுகள் தொடரும் வெற்றி கூட்டணி
  • நடிகர் கார்த்தி துணை இயக்குநராக மணி ரத்தினத்திடம் பணியாற்றினார்
  • நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்
பிரம்மாண்ட இயக்குநர் மணிரத்னம் – கவிஞர் வைரமுத்து – ஆஸ்கர் நாயகன் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்ற 25 ஆண்டுகளை தொட்டிருக்கும் வெற்றி கூட்டணியின் அடுத்த படைப்புதான் '''காற்று வெளியிடை'' என்ற திரைப்படம். நடிகர் கார்த்தி, நடிகை அதிதி ராவ், நடிகர் மற்றும் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் பலர் நடித்து அடுத்த மாதம் வெளிவரத் தயாராக இருக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைவரின் மத்தியில் டாப் டிரெண்டிங்காக உள்ளது.

இந்த சூழ்நிலையில், முழு இசை கோர்ப்பும் இன்று அதிகாரபூர்வமாக படக்குழுவினர் முன்னிலையில் வெளியாகியது, ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பதை விட அழகாக வரைந்துள்ளார் என்பதே சரியானது. 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அனைவரும் படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தனர், இந்நிகழ்ச்சி நடைபெறுவது அறிந்து நடிகரும் இப்படத்தின் கதாநாயகன் கார்த்தியின் அண்ணனுமான சூர்யா கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.
இப்படத்தின் 'அழகியே', 'வான்... வருவான்' மற்றும் 'சாரட்டு வண்டியில' ஆகிய பாடல்கள் ஒலி வடிவில் மட்டுமே வெளியாகி இருந்தன. இப்படத்தின் டிரையிலர், மார்ச் மாதம் (இம்மாதம்) 9 தேதி அன்று வெளியானது. படத்தின் மற்றொரு டிரையிலர் ஒன்றையும் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
 

''காற்று வெளியிடை'' திரைப்படத்தைப் பார்த்துவிட்ட சென்ஸார் குழு, அப்படத்திற்கு ‘U’ சான்றிதழை அளித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்