விளம்பரம்
முகப்புகோலிவுட்

காற்று வெளியிடை படப்பிடிப்பின் விபரீதத்திலிருந்து தப்பிய கேமராமேன் ரவிவர்மன்

  | March 30, 2017 15:12 IST
Movies

துனுக்குகள்

  • ஆசிரியராய், நண்பனாய், தந்தை அந்தஸ்தில் இருப்பவர் மணிரத்னம்
  • இயக்குநர் மணிரத்னம் அவர்களுடன் பணிபுரிவது என்னுடைய கனவு
  • நான் சரியான வழியில் சென்றுகொண்டிருப்பதாக மணிரத்னம் கூறினார்
ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் (பர்ஃபி மற்றும் ஜாகா ஜசூஸ் புகழ் ஒளிப்பதிவாளார்) தன்னுடைய வாழ்நாளின் நீண்ட நாள் கனவான இயக்குநர் மணி ரத்தினம் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் தருணம் தற்போது நடந்தேறியுள்ளது. வேலையை மிகவும் ரசித்து செய்யும் இவர் மணி ரத்தினம் அவர்களின் தமிழ் படமான காற்று வெளியிடை படத்திற்காக தன்னுடைய கேமரா வை மிகவும் ஆபத்தான பகுதி வரை கொண்டு சென்றதை பற்றி நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

நடிகர் கார்த்தி மற்று நடிகை அதிதி ராவ் இணைந்து நடித்துள்ள இப்படம் அழகான காதல் கதை களத்தில், இந்திய பறக்கும் படை பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கதாநாயகன் VC என்ற கதாப்பாத்திரத்தில் போர் விமானியாகவும் கதாநாயகி அதிதி மருத்துவராகவும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு காட்சிகள் காஷ்மீர், ஈரோப்பிய நாடுகள் உட்பட உலகின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டது. ஜீரோ டிகிரி குறைவாக குளிர் இருந்தபோதிலும் ரவி வர்மன் தன்னுடைய தொழிலில் இருந்த ஆர்வத்தாலும் மணி ரத்தினம் அவர்களுடன் பணி புரிய வேண்டுமென்ற ஆசையாலும் எதையும் பொருட்ப்படுத்தாமல் வேலை செய்ய வேண்டிய தருணங்கள் ஏற்பட்டது.

இதனால், ஒரு காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்த போது மிகவும் ஆபத்தான பகுதியில் உள்ளோம் என்று கூட அறியாமல் படமாக்கியுள்ளார். இதை பற்றி வர்மன் நம்மிடம் கூறும்போது, “ஒரு மிதமான வெப்ப நிலை ஒன்பது சென்டிகிரேட் டிகிரியில் படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தோம், இது ஒரு விமான படை கதை பற்றி இருப்பதால், பெல்கிரேட் நகரில் ஒரு M87 போர் விமானம் பறக்க துவங்கும் காட்சிகளை படமக்கி கொண்டிருந்தோம், அப்போது என்னிடம் விமான ஓடுதளம் தொழில்நுட்பாளர் ஒருவர் 200 மீட்டர் அளவில் குறிக்கப்பட்டுள்ள கோடுகளை தாண்டி வரவேண்டாம் என்று கூறினார், மணி சார் மற்றொரு தொழில்நுட்ப குழுவுடன் என்னைவிட்டு தள்ளி சற்று தொலைவில் இருந்தார், அதனால் போர் விமானத்தை இன்னும் அருகில் சென்ற தத்துரூபமாக எடுக்க அருகில் செல்ல முடிவு எடுத்தேன், அதனால் அந்த தொழில்நுட்ப நபர் கூறியதை பொருட்படுத்தாமல் கோடுகளை தாண்டி சென்று விமானம் புறப்படும் எல்லையிலிருந்து 100 மீட்டர் வரை தூரம் வரை சென்றேன், அந்த காட்சியை படமாக்கிக்கொண்டிருக்கும் போது ஒரு விதமான அனல் காற்று என்னை சுற்றியும் அடித்தது. கடும் குளிரிக்காக பிரத்யேக ஆடைகளை நான் அணிந்திருந்தாளும் என்னை அந்த அனல் காற்று சூழ்ந்து கொண்டது, அப்போது தான் நான் என் அருகில் இருந்த புல்கள் கருகி போய் இருந்ததை பார்த்தேன், அந்த சில மணி துளிகளிகளில் தான் எனக்கு புரிந்தது, விமானத்திலிருந்த வந்த அனல் காற்றில் தான் அந்த புற்கல் எரிந்து போனது என்பதை. நான் விமானத்தில் அருகில் சென்றதால் என்னுடைய தலைமுடி கூட கருகி போய் இருக்கும் என்ற நினைத்தேன் குளிருக்காக நான் அணிந்த உடைகள் என்னை காப்பாற்றியது, அடுத்த வினாடியே இன்னொரு விஷயமும் புரிந்தது மேலே சென்ற விமானம் இன்னும் 5 நிமிடங்களில் தரையிறங்க போகிறது ஆகையால் நான் உடனடியாக அந்த பாதுகாப்பு எல்லைக்கோட்டிற்கு அருகில் சென்றுவிட்டேன், அப்போது தான் புரிந்தது ஏன் அந்த தொழில்நுட்பாளர் என்னிடம் 200 மீட்டர் கோட்டை தாண்டாதீர்கள் என்று கூறியது,அந்த நொடி மிகவும் சாமர்த்தியமாக எந்த ஒரு காயமுமின்றி தப்பினேன்.”
 
mani ratnam ravi varman

விடாமுயற்சி வெற்றியை தேடி தரும் :-
இயக்குநர் மணி ரத்தினத்துடன் பணி புரிவது என்பது தனக்கு கனவாக இருந்தாலும் இதை பற்றி வர்மன் கூறுகையில் இது எனக்கு அதிர்ஷ்டத்தால் நடைப்பெறவில்லை என்று கூறுகிறார், “மணி சாருடன் பணி புரிய வேண்டுமென்ற கனவு என்னிடம் இருந்தது அதற்காக ஒரு திட்டம் என்னிடம் இருந்தது. பர்ஃபி திரைப்படம் முடித்த பின்பு மணி சாரிடம் என்னுடைய திறமைகளை ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று எண்ணினேன். அதற்காக சென்னையில் மணி சார் பர்ஃபி திரைப்படத்தை பிரத்யோகமாக பார்க்க காட்சி ஒன்றை ஏற்பாடு செய்து அவரிடம் கூறினேன், அவரும் படத்தை பார்த்து விட்டு நீங்கள் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறீர்கள் ரவி என்று அறிவுறை கூறினார், அதன் பின் எப்போது நான் மும்பையிலிருந்து சென்னை வந்தாலும் மணி சாரை தவறாமல் சென்று பார்ப்பேன், அவர் எப்போதுமே ஒரு நல்ல ஆசிரியராய், நண்பனாய், தந்தை அந்தஸ்தில் என்னை ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். அவருடன் பணி புரிய வேண்டுமென்ற எனது ஆசையை அவரிடம் பல முறை நேரடியாகவே கூறியுள்ளேன், அதன் பின் காற்று வெளியிடை திரைப்படம் துவங்கும் முன் அவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தது, அவர் கூறிய வார்த்தைகளை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன், விடா முயற்சி என்னுடைய கனவை நினைவாக்கியுள்ளது”.

மணி ரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள காற்று வெளியிடை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வரும் ஏப்ரல் 7 ஆம் தேதி வெளியாகும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்