முகப்புகோலிவுட்

"நான் விஸ்வாசம் படத்தில் நடிக்கவில்லை" - அஜித் பட வில்லன் ட்வீட்

  | July 19, 2018 12:08 IST
Viswasam Shooting Update

துனுக்குகள்

  • இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம்
  • அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார்
  • அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்தவர் கபீர் துகான் சிங்
‘வீரம், வேதாளம்’ படங்களின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் சிவா – நடிகர் அஜித் கூட்டணி அமைத்து, கடந்த ஆண்டு (2017) ரிலீஸான படம் ‘விவேகம்’. இதனையடுத்து அஜித்தின் புதிய படத்தையும் சிவாவே இயக்குகிறார். இது ‘தல’ அஜித்தின் கேரியரில் 58-வது படமாம். ‘விஸ்வாசம்’ என டைட்டிலிட்டுள்ள இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது.

இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், யோகி பாபு, தம்பி ராமைய்யா, ரோபோ ஷங்கர், விவேக், கோவை சரளா, பேபி அனிகா ஆகியோர் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இதற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
கடந்த ஜூன் 30-ஆம் தேதி முதல் துவங்கிய படத்தின் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் அடுத்த ஆண்டு (2019) பொங்கல் (சங்கராந்தி) பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் முக்கிய வேடத்தில் அஜித்தின் ‘வேதாளம்’ படத்தில் வில்லனாக நடித்த கபீர் துகான் சிங் நடிக்கவிருப்பதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது. தற்போது, கபீர் துகான் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் “ என் இனிய நண்பர்களே... நான் விஸ்வசம் (அஜித் சார் படம்) படத்தில் நடிக்கவில்லை... நான் தற்பொழுது காஞ்சனா 4 மற்றும் நடிகர் சித்தார்த் உடன் நடிக்கிறேன்... நன்றி அன்புடன் கபிர்... ” என்று தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்