விளம்பரம்
முகப்புகோலிவுட்

இது ஆரம்பம் தான் - "கடம்பன்" டிரையிலர் விமர்சனம்

  | March 03, 2017 11:30 IST
Movies

துனுக்குகள்

  • காடுகளின் அழிவை மையப்படுத்திய "கடம்பன்"
  • மஞ்சப்பை இயக்குநரின் அடுத்த படைப்பு
  • மலைவாழ் மனிதராக நடித்திருக்கும் ஆர்யா
தமிழர்கள் பண்டைய காலத்தில் தங்கள் வாழும் நிலங்களை ஐந்து விதமாக பிரித்து வைத்திருந்தனர், அந்த வகையில் மலையும் மலை சார்ந்த பகுதியை "குறிஞ்சி" என்றும், காடும் காடு சேர்ந்த பகுதியை "முல்லை" என்றும் அழைத்து வந்தனர். அந்த நிலங்களும், நிலத்தில் வாழும் விலங்குகளின் எண்ணிக்கையும், மனிதர்களின் சுய நலத்தினால் நாளுக்கு நாள் அழிவு நிலையயை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. இந்த விஷத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் "கடம்பன்"

அறிந்தும் அறியாமலும் தொடங்கி இன்று வரை வித்தியாசமான கதை களங்களை கண்டறிந்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவரான ஆர்யா "கடம்பன்" திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். மெட்ராஸ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, இந்நிலையில் இப்படத்தின் டிரையிலரை நடிகர் மாதவனும், சூர்யாவும் நேற்று தங்களுடைய அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

டிரையிலரின் தொடக்கத்தில் இடம்பெறும் வசனமே சிந்திக்கும் வண்ணம் அமைந்துள்ளது. ஆர்யாவின் வசன உச்சரிப்பும், உடல் மொழியும் அவரை ஒரு மலைவாழ் மனிதராகவே உணரவைக்கின்றது. இப்படத்தினை "மஞ்சப்பை" படத்தினை இயக்கிய ராகவா இயக்கியுள்ளார், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரையிலரின் காட்டப்படும் காட்டின் அழகியலை எஸ்.ஆர்.சதீஷ்குமார் அழகாக பதிவு செய்துள்ளார். இப்படத்தினை சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பாக ஆர்.பி. சௌத்ரி தயாரித்துள்ளார்.
 
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்