விளம்பரம்
முகப்புகோலிவுட்

சிம்பு – யுவன் காம்போவில் ‘காதல் தேவதை’ பாடல் ப்ரோமோ

  | October 11, 2017 15:46 IST
Santhanam

துனுக்குகள்

  • இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்து வருகிறார்
  • யுவன் ஷங்கர் ராஜா ‘காதல் தேவதை’ எனும் பாடலை பாடியுள்ளார்
  • அனிருத் பாடிய ‘கலக்கு மச்சான்’ பாடல் செம லைக்ஸ் குவித்தது
‘தில்லுக்கு துட்டு’ படத்தின் வெற்றிக்கு பிறகு சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. சேதுராமன் என்பவர் இயக்கி வரும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக வைபவி சாண்டில்யா டூயட் பாடி ஆடி வருகிறார். மேலும், விவேக், ரோபோ ஷங்கர், விடிவி கணேஷ், சம்பத், சஞ்சனா சிங் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம்.

நடிகர் ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு இசையமைத்து வரும் இதற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்து வருகிறார், ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ‘VTV புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் VTV கணேஷ் தயாரித்து வருகிறார். படத்தின் ஷூட்டிங் முடிவடையும் தருவாயில் உள்ளதாம். சமீபத்தில், படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அனிருத் பாடிய ‘கலக்கு மச்சான்’ பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
 

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, படத்தில் இடம்பெறும் ‘காதல் தேவதை’ எனும் பாடலின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ள இப்பாடலின் ப்ரோமோ ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. படத்தின் அனைத்து பாடல்களையும் வருகிற நவம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனராம்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்