விளம்பரம்
முகப்புகோலிவுட்

தொடங்கியது ‘கலகலப்பு 2’ படத்தின் படப்பிடிப்பு

  | October 04, 2017 13:19 IST
Mirchi Shiva

துனுக்குகள்

  • ‘சங்கமித்ரா’வின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் துவங்கவுள்ளது
  • முதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவும் இதில் நடிக்கவுள்ளார்
  • இப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது
‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகவிருந்த ‘சங்கமித்ரா’வின் ஷூட்டிங்கை டிசம்பர் மாதம் துவங்கவுள்ளனராம். ஆகையால், அதற்கு முன்பாக ‘கலகலப்பு 2’-வை இயக்க சுந்தர்.சி முடிவெடுத்துள்ளார். 2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானதால், இப்போதே பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. ‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடிக்கவுள்ளனர். முதல் பாகத்தில் நடித்த ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவாவும் இதில் நடிக்கவுள்ளார். ‘ஆவ்னி மூவீஸ்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரிக்கவுள்ள இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கவுள்ளார்.
 
தற்போது, இன்று (அக்டோபர் 4-ஆம் தேதி) முதல் காரைக்குடியில் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை மிர்ச்சி சிவாவே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சுந்தர்.சி-யுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபியை ஷேரிட்டதோடு, ஸ்டேட்டஸும் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். படத்தை அடுத்த ஆண்டு (2018) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்