முகப்புகோலிவுட்

அடுத்த கட்டத்திற்கு சென்ற ‘கலகலப்பு 2’

  | November 14, 2017 12:33 IST
Kalakalappu 2

துனுக்குகள்

  • இதிலும் ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ நடித்து வருகிறார்
  • இதன் 2-ஆம் கட்ட படப்பிடிப்பு காசியில் நடந்து வந்தது
  • இப்படத்தை நடிகை குஷ்பூ தயாரித்து வருகிறார்
‘அரண்மனை 2’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கலகலப்பு 2’. 2012-ஆம் ஆண்டு வெளியான ‘கலகலப்பு’ முதல் பாகத்தில் விமல், மிர்ச்சி சிவா, ஓவியா, அஞ்சலி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதால், இப்போதே பார்ட் 2 மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் உச்சத்தில் உள்ளது. ‘கலகலப்பு 2’-வில் ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா நடிக்கின்றனர்.

முதல் பாகத்தில் நடித்த ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ மிர்ச்சி சிவாவும் இப்படத்தில் நடிக்கிறார். மேலும்,வையாபுரி, சதீஷ், மனோபாலா, ரோபோ ஷங்கர், சந்தான பாரதி என மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறதாம். ‘ஆவ்னி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் நடிகை குஷ்பூ தயாரிக்கும் இதற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கிறார், UK.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்து வைரலானது. இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காசியில் பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இன்று (நவம்பர் 14-ஆம் தேதி) முதல் புனேவில் (PUNE) துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெகு விரைவில் டீஸர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்