முகப்புகோலிவுட்

ஷூட்டிங்கை நிறைவு செய்த ‘களவாணி 2’ டீம்

  | June 25, 2018 13:07 IST
Kalavani 2 Shooting Update

துனுக்குகள்

  • ‘களவாணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சற்குணம்
  • இதிலும் விமல், ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளனர்
  • ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகாமகியுள்ளது
2010-ஆம் ஆண்டு வெளியான ‘களவாணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சற்குணம். இதில் ஹீரோவாக விமல் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

சற்குணமே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்து, இயக்கும் இதற்கு ‘K2’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்திலும் விமல், ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா ஜோடி சேர்ந்து நடிக்கின்றனர். ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு ஓவியாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகாமகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை இயக்குநர் சற்குணமே தனது ட்வீட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் & டீசர் ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்