முகப்புகோலிவுட்

இன்ஸ்டகிராமில் நுழைந்த உலகநாயகன்

  | June 12, 2018 19:45 IST
Kamal Haasan

துனுக்குகள்

  • கமல்ஹாசன் இயக்கியிருக்கும் படம் `விஸ்வரூபம் 2'
  • இதன் டிரெய்லர் நேற்று வெளியானது
  • அதன் போஸ்டருடன் இன்ஸ்டகிராமில் நுழைந்திருக்கிறார்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் நேற்று வெளியான நிலையில், பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் தனது அதிகாரப்பூர்வ பிரவேசத்தை செய்திருக்கிறார் கமல்ஹாசன். 'விஸ்வரூபம் 2' படத்தின் போஸ்டரை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட சில மணி நேரங்களில் உலகநாயகனை, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின் தொடர ஆரம்பித்துள்ளனர். அண்மையில் அரசியலில் களமிறங்கி உள்ள கமல்ஹாசன், தனது ட்விட்டர், முகநூல் பக்கங்களில் தனது அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களால் தமிழக அரசியலில் அவ்வப்போது புயலை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

கமல் இயக்கத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ள 'விஸ்வரூபம் 2', ஆகஸ்ட் 10 அன்று வெளியாக உள்ளது. பல்வேறு எதிர்ப்புகளுக்கிடையே கடந்த 2013 -இல் வெளியான விஸ்வரூபம் முதல் பாகம் வசூல் ரீதியாக மிகப்பெரும் வெற்றியடைந்த நிலையில் விரைவில் வெளியாகவுள்ள 'விஸ்வரூபம் 2' ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் களம் கண்டுள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ள கமல் நடிப்பில், 'சபாஷ் நாயுடு' மற்றும் 'இந்தியன் 2' அடுத்தடுத்து வெளியாக உள்ளன.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்