முகப்புகோலிவுட்

'இந்தியன் 2'வில் கமல் இல்லையா? – படக்குழு விளக்கம்

  | October 16, 2017 12:21 IST
Kamal Haasan Next Film

துனுக்குகள்

  • 'இந்தியன்' முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • இப்படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்
  • கமலுக்கு பதிலாக சூர்யா நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகா ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. கமலே ஹீரோவாக நடிக்கவிருந்த 'இந்தியன் 2'வை 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் தில் ராஜு மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில், ‘இந்தியன் 2’விலிருந்து கமல் விலகியுள்ளதாகவும், அவருக்கு பதிலாக கதையின் நாயகனாக சூர்யா நடிக்கவிருப்பதாகவும் கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. தற்போது, இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது “கமல் தான் ‘இந்தியன் 2’வில் நடிக்கவுள்ளார். ‘2.0’-வின் ரிலீஸுக்கு பிறகு ஷங்கர் இப்படத்தின் பணிகளை துவங்குவார்” என விளக்கம் அளித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்