விளம்பரம்
முகப்புகோலிவுட்

நானும், ரஜினியும் கூறியது ஒரே கருத்து தான் – கமல்

  | July 14, 2017 14:54 IST
Kamal Haasan Speech

துனுக்குகள்

  • பத்திரிகையாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்
  • ரஜினியும், நானும் கூறியது ஒரே கருத்துதான்
  • நான் சொன்னதை ரஜினி வழிமொழிந்ததற்கு நன்றி
சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம், உங்களுடைய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கட்சி துவங்கினால், அவருக்கு ஆதரவு கொடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், “என் நண்பர் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கி ரொம்ப நியாயமாக செயல்பட்டால் மக்களுக்கு நல்லதே நடக்கும். இல்லையென்றால் நிச்சயமாக என் விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்” என்று கூறியுள்ளார் கமல்.

அதேபோல், ரஜினிகாந்த் சிஸ்டம் சரியில்லை என்று சொன்னதும், நீங்கள் சட்டசபைக்கு மறுதேர்தல் வைக்கணும்னு குறிப்பிட்டது பற்றி கமலிடம் கேட்க, “நாங்கள் இருவர் கூறியதும் ஒரே கருத்துதான். ஒரே திசையை நோக்கி செல்லும் வெவ்வேறு கருத்து. மேலும், சிஸ்டம் சரியில்லை என்று ஒன்றரை வருடத்திற்கு முன்பே முதலில் சொன்னது நான் தான். நான் சொன்னதை எனது நண்பர் ரஜினி வழிமொழிந்ததற்கு மிக்க நன்றி” என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்