முகப்புகோலிவுட்

'விஸ்வரூபம் 2' திரைப்படத்தில் என்ன எதிர்பார்க்கலாம்? - சொல்கிறார் கமல்

  | June 13, 2018 00:24 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • இசையமைப்பாளர் கிப்ரான் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார்
  • படத்தின் தாமதத்திற்கு அவரும் எந்த வகையிலும் காரணம் இல்லை
  • படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளது
2013ஆம் ஆண்டில் 'கலைஞானி' கமல்ஹாசன் நடித்து இயக்கி வெளியாகி, வசூலை வாரிக்குவித்த திரைப்படம் 'விஸ்வரூபம்'. நிதி பிரச்சினைகளால் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாய், இழுத்தடித்துக் கொண்டிருந்த இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் வெளியீடு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதிக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான இப்படத்தின் டிரைலரும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. 

தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஆகஸ்ட் 10ஆம் தேதி 'விஸ்வரூபம் 2' வெளியாகவுள்ள  நிலையில், இத்திரைப்படம் குறித்து கமல்ஹாசன் அவர்கள் கூறியவை இங்கே உங்களுக்காக:  

"எங்களது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனலில் எப்பொழுதுமே நாங்கள் எது சரியென்று நம்பினோமோ, அதையே செய்திருக்கிறோம். இந்த படத்திலும் அதையே தொடர்ந்துள்ளோம். இந்த படத்தின் தாமதத்திற்கு காரணம், தயாரிப்பு சம்பந்தப்பட்ட அல்லது எந்த தனி நபர் சம்பந்தப்பட்ட தவறும் அல்ல. இந்த படத்திற்கு எதிராக பலர் இருந்தனர், அதுவே காரணம். அவர்களை நாம் எதுவும் செய்ய தேவையில்லை.    
முதல் பாகத்தின் தொடர்ச்சியாக மட்டுமல்லாமல், 'விஸ்வரூபம் 2' சில முன் கதைகளையும் ரசிகர்களுக்கு சொல்லும். அதனால், படத்தில் ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது. அதே நேரத்தில், படத்தில் வரும் கதாபாத்திரங்களை இன்னும் நன்றாக தெரிந்துகொள்ளும்படியான அவர்களோடு தொடர்புபடுத்திக் கொள்ளும்படியான எமோஷனல் காட்சிகளும் உண்டு. 

படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் அற்புதமாக வந்துள்ளது. இசையமைப்பாளர் கிப்ரான் தனது பணியை மிகச் சிறப்பாக செய்துள்ளார். படத்தின் தாமதத்திற்கு அவரும் எந்த வகையிலும் காரணம் இல்லை."
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்