முகப்புகோலிவுட்

'பிக் பாஸ்' சீசன் 2 டீசரை வெளியிட்ட கமல்

  | May 12, 2018 17:29 IST
Bigg Boss 2

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்
  • சீசன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார்
  • சீசன் 2-வையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த ‘பிக் பாஸ்’ ஷோ சீசன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘பிக் பாஸ்’ சீசன் 2 பற்றி தகவல் வெளியாகியுள்ளது.
 
சீசன் 2-வையும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். சமீபத்தில், இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நடந்தது. இந்நிலையில், கமல்ஹாசன் தனது ட்வீட்டர் பக்கத்தில் ‘பிக் பாஸ் 2’ டீசரை வெளியிட்டுள்ளார். இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம். ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் ஷோ துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்