முகப்புகோலிவுட்

ஜூன் மாதம் துவங்கவிருக்கிறது 'பிக் பாஸ்' சீஸன் 2

  | May 04, 2018 11:05 IST
Bigg Boss 2

துனுக்குகள்

  • ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்
  • சீஸன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார்
  • சீஸன் 2-வையும் கமலே தொகுத்து வழங்கவுள்ளார்
உலகமெங்கும் புகழ் பெற்ற ரியாலிட்டி ஷோ ‘பிக் பாஸ்’. கடந்த ஆண்டு (2017) ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தமிழில் ‘விஜய் டிவி’யில் ஒளிபரப்பானது. இந்நிகழ்ச்சியை நடிகர் ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.

இந்த ‘பிக் பாஸ்’ ஷோ சீஸன் 1-யில் நடிகர் ஆரவ் வெற்றி பெற்றார். ‘பிக் பாஸ்’ ஷோவிற்கு பிறகு இதில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது, ‘பிக் பாஸ்’ சீஸன் 2 பற்றி தகவல் வெளியாகியுள்ளது.

சீஸன் 2-வையும் ‘உலக நாயகன்’ கமல்ஹாசனே தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான ப்ரோமோ ஷூட்டிங் நேற்று (மே 3-ஆம் தேதி) நடந்ததாம். இதில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறதாம். ஜூன் மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் ஷோ துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்