விளம்பரம்
முகப்புகோலிவுட்

உலக நாயகனின் சகோதரர் காலமானார்

  | March 19, 2017 13:57 IST
Kamal Haasan Brother Death

துனுக்குகள்

  • உலகநாயகனுக்கு சாரு ஹாஸன்,சந்திர ஹாஸன் என இரு சகோதரர்கள் உண்டு
  • சந்திரஹாஸன் பிரபல கிரிமினல் வழக்கறிஞர்
  • கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்
உலக நாயகன் கமல் ஹாஸனின் இரண்டாவது சகோதரர் சந்திர ஹாஸன் இன்று தனது 82-வது வயதில் பிரத்தனில் மாரடைப்பால் காலமானார்.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி என்ற ஊரில் பிரபல வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் – ராஜலட்சுமி அவர்களின் இரண்டாவது மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாஸனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.

உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் வெளிவந்து பல வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாஸன்(82), பிரத்தன் நாட்டில் லண்டன் மாநகரில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாஸன் வசிக்கும் வீட்டில் மாரடைப்பால் மரணம் அடைந்ததாக இன்று செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்திர ஹாஸனின் மனைவி கீதா மணி, சென்ற ஜனவரி மாதம் சென்னையில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்