விளம்பரம்
முகப்புகோலிவுட்

உலக நாயகன் மகள் ராஜலட்சுமியை உங்களுக்கு தெரியுமா?

  | March 16, 2017 17:12 IST
Celebrities

துனுக்குகள்

  • கமலுக்கு ஸ்ருதி மற்றும் அக்‌ஷரா என இரு மகள்கள் உள்ளனர்
  • கமலின் தாயார் பெயர் ராஜலட்சுமி
  • ஸ்ருதி உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார்
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என மூன்று மொழி திரைப்படங்களிலுமே படு பிஸியாக நடித்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் என்பதையும் தாண்டி நல்ல இசை அமைப்பாளர், பாடலாசிரியர், சிறந்த பாடகி என்று தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி திரை உலகில் வலம் வந்து கொண்டுள்ளார். இவரை சினிமா ரசிகர்களுக்கு எல்லோருக்கும் ஸ்ருதி ஹாசன் என்ற பெயரில் தான் தெரியும். ஆனால் இவருக்கு உலக நாயகன் கமல் ஹாஸன் முதலில் வைத்த பெயர் ராஜலட்சுமி. இது கமல் ஹாஸனின் அம்மாவின் பெயராகும்.
 
shruti haasan kamal haasan


ஆனால் ஸ்ருதி ஹாஸன் வளர, வளர இசை மீது அவருக்கு இருந்த ஆர்வத்தை அறிந்த கமல் ஹாஸன், தனது தாயார் நினைவாக வைத்த ராஜலட்சுமி என்ற பெயரை மாற்றி ஸ்ருதி என்று வைத்துள்ளார், தற்போது அதை ஸ்ருதி ஹாஸன் என்று மாறிவிட்டது. உலக நாயகன் கமல் ஹாஸன் நடிப்பில் உருவான உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்