முகப்புகோலிவுட்

‘பிக் பாஸ்’ முடிந்ததும் ‘இந்தியன் 2’ ஷூட்டிங் - ஸ்கெட்ச் போட்ட கமல்ஹாசன்

  | September 11, 2018 13:31 IST
விக்ரமின் 'ஐ' படத்தின் ஹிட்டிற்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரெடியாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனையடுத்து இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' படத்தின் 2-ஆம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்திருந்தார். பார்ட்-1 சூப்பர் ஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. இதிலும் கதையின் நாயகனாக கமல்ஹாசனே நடிக்கவுள்ளார். முதல் பாகத்தில் சி.பி.ஐ-ஆக வலம் வந்த நடிகர் நெடுமுடி வேணு இந்த படத்திலும் அதே கதாபாத்திரத்தில் (கிருஷ்ணசுவாமி) நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லக்ஷ்மி சரவணகுமார் மூவரும் இணைந்து வசனம் எழுதி வருகிறார்கள். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடைபெறுகிறதாம். தற்போது, கமல் விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ சீசன் 2 முடிந்த பிறகு ‘இந்தியன் 2’வின் முதல் ஷெடியூலில் கலந்து கொள்வாரென தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்