முகப்புகோலிவுட்

'இந்தியன் 2' தள்ளிப்போவது எதனால்?

  | March 23, 2018 10:49 IST
Indian 2 Cast

துனுக்குகள்

  • 'இந்தியன்' முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • ‘பிக் பாஸ்’ சீஸன் 2 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போகிறார்
  • ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாக அதிக வாய்ப்பு இருக்கிறது
விக்ரமின் 'ஐ' படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் '2.0'. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து ஷங்கர் 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளார்.

1996-ஆம் ஆண்டு ரிலீஸான இதன் முதல் பாகத்தில் 'உலக நாயகன்' கமல்ஹாசன் டபுள் ஆக்ஷனில் அசத்தியிருந்தார். பார்ட்-1 மெகாஹிட் என்பதால் இப்போதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இதிலும் கமல்ஹாசனே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இதற்கு ஜெயமோகன் வசனம் எழுதுகிறார். படத்தின் ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டு வருகிறது. இது குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்களில் விசாரித்த போது “பரவி வரும் இச்செய்தி வதந்தியே. வெகு விரைவில் தொடங்கவிருக்கும் ‘பிக் பாஸ்’ சீஸன் 2 நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கப்போகிறார். இந்நிகழ்ச்சி நிறைவு பெற்ற பிறகு ஆகஸ்ட் மாதம் ‘இந்தியன் 2’வின் படப்பிடிப்பு ஆரம்பமாக அதிக வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளனர்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்