முகப்புகோலிவுட்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ சென்சார் முடிந்தது... விரைவில் டிரெய்லர்

  | March 17, 2018 10:04 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக ரெடியாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றது. தற்போது, படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் முடிந்த பிறகு படத்தின் டிரெய்லர் ரிலீஸ் செய்யப்படுமாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்