முகப்புகோலிவுட்

'விஸ்வரூபம் 2' மதுரையில் வெளியாகவில்லை

  | August 10, 2018 13:32 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • கமல், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் நடித்துள்ளனர்
  • இப்படம் இன்று 3 மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது
  • 2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு தான் முதல் பாகம் வெளியானது
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது.

அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக இன்று (ஆகஸ்ட் 10-ஆம் தேதி) தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் உலகமெங்கும் ரிலீஸாகியுள்ளது ‘விஸ்வரூபம் 2’. ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தற்போது, தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இந்த படம் மதுரையில் மட்டும் வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்