விளம்பரம்
முகப்புகோலிவுட்

துவங்கியது ‘விஸ்வரூபம் 2’வின் இறுதிக்கட்ட பணிகள்

  | April 20, 2017 16:39 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இப்படத்தை கமலே நடித்து, தயாரித்து, இயக்கியுள்ளார்
  • ‘சபாஷ் நாயுடு’வின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது
பல போராட்டங்களுக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் 2013-ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு பெரிதளவில் உள்ளது.

சமீபத்தில், ‘விஸ்வரூபம் 2’வில் இன்னும் சில இறுதிக்கட்ட பணிகள் மட்டுமே பேலன்ஸ், விரைவில் இந்த வேலைகள் துவங்கவுள்ளன என்று கமல் ட்விட்டியிருந்தார். இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 19-ஆம் தேதி) முதல் படத்தின் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய 3 வெர்ஷன்களுக்குமான டப்பிங் மற்றும் இதர போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை தொடங்கியுள்ளதாம் படக்குழு. இதுகுறித்து ‘தூங்காவனம்’ இயக்குநர் ராஜேஷ்.எம்.செல்வாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸ் தட்டி உறுதிபடுத்தியுள்ளார்.
 
 
விரைவில் ‘சபாஷ் நாயுடு’வின் அடுத்த கட்ட படப்பிடிப்பும் துவங்கவுள்ளதாம். ஆகையால் நிச்சயம் இவ்வருடம் ‘உலக நாயகன்’ ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இரண்டு படங்கள் வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கமலே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ மூலம் தயாரித்து வரும் ‘விஸ்வரூபம் 2’வில் கமலுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்