விளம்பரம்
முகப்புகோலிவுட்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியீடு?

  | May 29, 2018 12:38 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • ‘விஸ்வரூபம்’ முதல் பாகம் மெகா ஹிட்டானது
  • இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் நடித்துள்ள
  • இதில் பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் நடித்துள்ள
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக ரெடியாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஸ்டில்ஸ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம். தற்போது, படத்தை வருகிற ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினத்தையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. வெகு விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ட்வீட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்