விளம்பரம்
முகப்புகோலிவுட்

கமலின் ‘விஸ்வரூபம் 2’ ஷூட்டிங் ப்ளான்

  | November 14, 2017 12:30 IST
Vishwaroopam 2

துனுக்குகள்

  • பல போராட்டங்களுக்கு பிறகு வெளியானது ‘விஸ்வரூபம்’
  • ‘VR2’-க்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்தது
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது.

இதன் தொடர்ச்சியாக ரெடியாகிவரும் படம் ‘விஸ்வரூபம் 2’. கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்து வரும் இதற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில், கமல்ஹாசன் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றது. படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். தற்போது, படத்தில் இடம்பெறும் முக்கியமான சில காட்சிகளை சென்னையிலுள்ள ‘ஆஃபீசர்ஸ் டிரெயினிங் அகாடமி’யில் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஷெடியூலின் ஷூட்டிங்கை வருகிற நவம்பர் 25-ஆம் தேதி முதல் துவங்கவுள்ளனராம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்