முகப்புகோலிவுட்

‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஸ்டன்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ

  | August 06, 2018 18:10 IST
Vishwaroopam 2  Kamal Haasan

துனுக்குகள்

  • இதன் டிரெய்லர் & 3 பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது
  • படத்தை ஆகஸ்ட் 10-ஆம் தேதி 3 மொழிகளில் ரிலீஸ் செய்யவுள்ளனர்
  • இப்படத்தை ‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல் தயாரித்துள்ளார்
2013-ஆம் ஆண்டு பெரிய போராட்டங்களுக்கு பிறகு ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘விஸ்வரூபம்’ படம் வெளியாகியது. ஹாலிவுட்டிற்கு நிகரான லெவலில் இருந்த இப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடையேவும் மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபிஸிலும் கலெக்ஷன் கிங்காக வசூல் மழை பொழிய வைத்தது. இதன் தொடர்ச்சியாக ரெடியாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’.

‘ஆஸ்கர் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசன் தனது ‘ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல்’ நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இதில் உலக நாயகனுடன், பூஜா குமார், ஆண்ட்ரியா, ராகுல் போஸ், சேகர் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பார்த்த சென்சார் குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனராம்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் டிரெய்லர் மற்றும் 3 பாடல்கள் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. படத்தை வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் ஸ்டன்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்