முகப்புகோலிவுட்

"யாரென்று தெரிகிறதா... இவன் தீ என்று புரிகிறதா!" - மிரட்டலான 'விஸ்வரூபம் 2' டிரெய்லர்

  | June 11, 2018 17:10 IST
Vishwaroopam 2 Trailer

துனுக்குகள்

  • கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான படம் விஸ்வரூபம்
  • இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது
  • அதன் டிரெய்லர் தற்போது வெளியாகியிருக்கிறது
கமல்ஹாசன் இயக்கத்தில் 2013ல் வெளியான படம் `விஸ்வரூபம்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என அப்போதே அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தை இயக்கிய போதே இரண்டாம் பாகத்துக்கான வேலைகளில் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது என தெரிவிக்கப்பட்டது.

கமலுடன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகம் உடனடியாக நடக்கவில்லை. கமல் அடுத்தடுத்து நடித்த படங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது எனப் பல வேளைகளில் இருந்ததாலும், சில சிக்கல்களாலும் `விஸ்வரூபம் 2' படத்திற்கான வேலைகள் தள்ளிப் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தை விரைவில் முடிக்கும் வேலைகளில் கமல் இறங்கிய தகவல்களும், புகைப்படங்களும், படத்தின் டிரெய்லருக்கான அறிவிப்பும் வெளியானது.
 

தற்போது `விஸ்வரூபம் 2' படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுவருகிறது. இப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்