முகப்புகோலிவுட்

எதிர்கால உலகத்தர தமிழ் சினிமாவின் தொடக்கம் – 'கனவு வாரியம்’ திரைப்படத்தின் டீஸர்

  | February 04, 2017 12:08 IST
Arun Chidambaram Film

துனுக்குகள்

  • இரண்டு ரெமி விருதுகளை பெற்ற தமிழ் படம்
  • உலகளாவிய பார்வையை தமிழ் திரையுலகின் மீது திருப்பிய இயக்குனர்
  • கனவில்லாத மனிதர்கள் இவ்வுலகில் யாருமில்லை
தமிழகத்தில் நிலவிய மின்வெட்டு பிரச்னையை மையமாக வைத்து உருவாகி உள்ள திரைப்படம் ‘கனவு வாரியம்’. படம் வெளியாவதற்கு முன்பே ஏழு உலக விருதுகளையும், ஒன்பது நாடுகளில் இருந்து பாராட்டுகளையும் பெற்றது இத்திரைப்படம். உலகப் புகழ் பெற்ற ‘ரெமி’ விருதுகளை 2 துறைகளில் வென்றள்ள முதல் இந்தியத் திரைப்படம் ‘கனவு வாரியம்’ தான். இத்திரைப்படம் இயக்குநர் அருண் சிதம்பரம். இப்படத்தின், கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், எழுதியதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அருண் சிதம்பரம்.


இப்படத்தின் முதல் அதிகாரப்பூர்வ டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியா முழுவதும் வார்னர் பிரதர்ஸ் வெளியிடும் முதல் தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்படம் ‘கனவு வாரியம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்