விளம்பரம்
முகப்புகோலிவுட்

'காஞ்சனா 3' படத்தில் ‘விவேகம்’ கனெக்ஷன்

  | October 06, 2017 12:13 IST
Kanchana 3

துனுக்குகள்

  • இதன் முந்தைய பாகங்கள் மெகா ஹிட்டானது
  • இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் துவங்கியுள்ளது
  • அஜித்தின் ‘விவேகம்’ படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவு செய்திருந்தார்
‘மொட்ட சிவா கெட்ட சிவா, சிவலிங்கா’ படங்களுக்கு பிறகு ராகவா லாரன்ஸ் கைவசம் இயக்குநர் மகாதேவ்வின் படம் மற்றும் ‘முனி 4’ (காஞ்சனா 3) ஆகிய இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘முனி 4’ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவல் அதிகமாக உள்ளது. ஏனெனில், ஹாரர் காமெடி ஜானரில் வெளியான ‘முனி, காஞ்சனா (முனி 2), காஞ்சனா 2 (முனி 3)’ ஆகிய இதன் முந்தைய பாகங்கள் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை லாரன்ஸே இயக்கி, நடிக்கிறார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து ராகவா லாரன்ஸ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ராகவேந்திரா புரொடக்ஷன்’ மூலம் தயாரிக்கிறாராம். ‘முனி’ முதல் பாகத்தில் லாரன்ஸுடன் டூயட் பாடிய வேதிகா மற்றும் ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா என டபுள் ஹீரோயின்ஸாம். நேற்று (அக்டோபர் 5-ஆம் தேதி) முதல் சென்னையில் துவங்கிய படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்து வருகிறது.
 
இந்த ஷெடியூல் தொடர்ந்து 20 நாட்களுக்கு நடைபெறவுள்ளதாம். தற்போது, படத்தின் ஒளிப்பதிவாளராக ‘விவேகம்’ பட புகழ் வெற்றி கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை வெற்றியே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். வெகு விரைவில் இதர நடிகர்கள் - பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் டிவிட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்