விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஆண்களை பகைத்துக்கொண்டால் மிக மோசமாக நடந்துக்கொள்வார்கள் - கங்கனா ரணாவத் பளார் பேட்டி

  | September 05, 2017 17:43 IST
Kangana Ranaut Interview

துனுக்குகள்

  • ஆண்களின் கண்ணீர் கதைகளை நான் எப்போதுமே நம்பமாட்டேன்
  • இந்த நிகழ்வுகள் வேலை பார்க்கும் இடங்களில் பெரும் சிக்கல் ஏற்படுத்தி விடும
  • 15 முதல் 25 வயதுக்குள் உள்ள ஆண்கள் பெரிதும் உண்மை பேசுபவர்கள்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது மனதில் எதனையும் வைத்துக்கொள்ளாமல் வெளியே சொல்லி விடுவார். சமீபத்தில் தன்னுடைய திரை உலக வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசிய அவர்…

“ நான் திரையுலகில் நடிக்க வந்த துவக்க காலத்தில் பல ஆண்கள் என் மீது கண்ணும் சிலர் கையும் வைக்கப்பார்த்தார்கள். திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், பருவ வயதை அடைந்தவர்கள், முதியவர்கள் என பலர் என்னை விரும்பினார்கள். எப்படி பட்ட துறையாக இருந்தாலும், ஆண்களை ஒதுக்கினால், அவர்கள் நம்மிடம் மிகவும் மோசமாக நடந்து கொள்வார்கள். இந்த நிகழ்வுகள் வேலை பார்க்கும் இடங்களில் பெரும் சிக்கல் ஏற்படுத்தி விடும்.

25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களின் கண்ணீர் கதைகளை நான் எப்போதுமே நம்பமாட்டேன். ஆனால் 15 முதல் 25 வயதுக்குள் உள்ள ஆண்கள் பெரிதும் உண்மை பேசுபவர்களாகவே நான் நினைக்கிறன்” என்று தெரிவித்துள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்