முகப்புகோலிவுட்

இயக்குநர் மணிரத்னத்திற்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

  | March 01, 2018 16:52 IST
Mani Ratnam

துனுக்குகள்

  • தமிழின் முன்னணி இயக்குநர் மணிரத்னம்
  • தற்போது `செக்கச்சிவந்த வானம்' படம் இயக்கிக் கொண்டிருக்கிறார்
  • இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் படம் இயக்கியிருக்கிறார் மணிரத்னம். தற்போது அரவிந்த்சுவாமி, சிலம்பரசன், விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது மணிரத்னத்திற்கு கர்நாடக அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்க இருக்கிறது. மணிரத்னம் தன்னுடைய சினிமா பயணத்தை துவங்கிய அனுபல்லவி என்கிற கன்னடப் படத்தின் மூலம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த விருதை கர்நாடக அரசும், பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா குழுவினரும் இணைந்து துவங்கியிருக்கிறார்கள். இதன் முதல் விருதையே மணிரத்னத்திற்கு கொடுக்கிறது கர்நாடக அரசு. பத்து லட்சம் தொகையும், பட்டயமும் சேர்த்து வழங்கப்பட இருக்கும் இந்த விருதை, பெங்களூர் விதானசவுதாவில் முதல்வர் சித்தராமய்யா மணிரத்னத்துக்கு இன்று மாலை 5.30க்கு கொடுக்க இருக்கிறார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்