முகப்புகோலிவுட்

தேவ் படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் புதிய படத்திற்கு பூஜை போட்ட படக்குழு

  | March 13, 2019 18:36 IST
Karthi 19

துனுக்குகள்

  • இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார்
  • இந்த படத்தில் ராஷ்மிகா நடிக்கிறார்
  • ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன் இப்படத்தில் பணியாற்றுகிறார்
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தியின் 19வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.
 
'தேவ்' படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
 
இதனைத் தொடர்ந்து, பாக்கியராஜ் கண்ணன், இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் நடித்து தெலுங்கு, தமிழில் வெளியான, விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த 'கீதா கோவிந்தம்' படம் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தமிழில் இப்படத்தின் மூலம் கார்த்திக்கு நாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
இசையமைப்பாளராக விவேக் - மெர்வின், ஒளிப்பதிவாளராக சத்யன் சூரியன், கலை இயக்குநராக ஜெய், சண்டை பயிற்சியாளராக திலீப் சுப்பராயன், எடிட்டராக ரூபன், ஆடை வடிவமைப்பாளராக உத்ரா மேனன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
 
எமோஷன், ஆக்‌ஷன் கலந்த காமெடி கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இதற்காக சென்னையில் பிரம்மாண்டமான பல அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், தமிழ்நாட்டில் பல இடங்களிலும், ஹைதராபாத்தில் அரங்குகள் அமைத்தும் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இன்று இந்த படத்திற்கான பூஜை போடப்பட்டது இதில் நடிகர் கார்த்தி வில்லன் நடிகர் பொன்ணம்பலம்,பிரபு எஸ்.ஆர். படக்குழுவினர் கலந்துக்கொண்டனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்