முகப்புகோலிவுட்

‘நீதி நாதி ஒகே கதா’ இயக்குநரின் படத்தில் நடிக்கிறேனா? - கார்த்தி மறுப்பு

  | April 13, 2018 10:58 IST
Karthi

துனுக்குகள்

  • கார்த்தி கைவசம் 2 படங்கள் உள்ளது
  • ‘நீடி நாடி ஒகே கதா’ தெலுங்கில் சூப்பர் ஹிட்டானது
  • கார்த்திக்கு வேணு கூறிய ஒன் லைன் மிகவும் பிடித்து விட்டதாக கூறப்பட்டது
வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கைவசம் பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ரஜத் ரவிஷங்கர் படம் என இரண்டு படங்கள் உள்ளது. கடந்த சில நாட்களாக மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க கார்த்தியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்படுகிறது.

சமீபத்தில், ‘நீடி நாடி ஒகே கதா’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் வேணு உடுகுலா. அங்கு இப்படம் சூப்பர் ஹிட்டானது. இதனையடுத்து இவர் இயக்கவுள்ள படத்தை தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.

மேலும், இதற்காக நடிகர் கார்த்தியை சந்தித்து படத்தின் ஒன் லைனை வேணு கூறியதாகவும், அது அவருக்கு மிகவும் பிடித்துபோக முழு ஸ்க்ரிப்டையும் ஏப்ரல் 15-ஆம் தேதி கேட்பதாகவும் தெரிவித்தார் என்றும் செய்திகள் வெளியானது. தற்போது, இது குறித்து கார்த்தி பேசுகையில் “பரவி வரும் இச்செய்தி வதந்தியே” என்று கூறியுள்ளார்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்