முகப்புகோலிவுட்

ஷூட்டிங்கை நிறைவு செய்த ‘நரகாசூரன்’ டீம்

  | November 14, 2017 15:49 IST
Naragasooran Release Date

துனுக்குகள்

  • இப்படத்தை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரிக்கிறார்
  • இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடிக்கிறார்
  • இதன் மொத்த படப்பிடிப்பையும் 41 நாட்களில் நிறைவு செய்துள்ளனர்
ரகுமானின் ‘துருவங்கள் பதினாறு’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘நரகாசூரன்’. இதனை ‘ஷர்தா எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கிறார். இதில் ஹீரோவாக அரவிந்த் சாமி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் மலையாள நடிகர் இந்திரஜித் சுகுமாரன், ‘மாநகரம்’ சந்தீப் கிஷன், ஸ்ரேயா, ‘மீசைய முறுக்கு’ ஆத்மிகா ஆகியோர் நடிக்கின்றனர்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகுகிறது. ஏற்கெனவே, படக்குழுவால் டிவிட்டப்பட்ட 2 வித்தியாசமான போஸ்டர்ஸ் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலானது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றது. ‘மாயா’ புகழ் ரான் யோஹான் இசையமைக்கும் இதற்கு சுஜித் சாரங் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
 
இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வந்தது. தற்போது, படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தயாரிப்பாளர் கெளதம் மேனனே தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டேட்டஸாகத் தட்டி உறுதிபடுத்தியுள்ளார். மொத்த படப்பிடிப்பையும் 41 நாட்களில் முடிக்கப்பட்டுள்ளதாம். படத்தை அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்