முகப்புகோலிவுட்

“ரஜினி சாரை வைத்து அடுத்த படமெல்லாம் இல்லை”- கார்த்திக் சுப்புராஜ்

  | January 09, 2019 12:31 IST
Petta

துனுக்குகள்

  • பேட்ட திரைப்படம் பொங்கல் டிரீட்
  • அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்
  • கார்த்திக் சுப்புராஜ் முதல் முறையாக ரஜினியை வைத்து இயக்கும் படம் இது
சன்பிக்சர் தயாரிப்பில் வருகின்ற 10ம் தேதி திரையரங்குகளை நிரப்ப வருகிறது ரஜினியின் “பேட்ட”. இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார், அனிரூத் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா இன்னும் பல நடிகர்கள் இந்த படத்தில் விருந்தளிக்க இருக்கிறார்கள். இந்த படம் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கார்த்திக் சுப்புராஜ்.

பேட்ட திரைப்படம் முழு கமர்ஷியல், ஸ்டைலிஷ் படம். இந்த படம் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். ரஜினி சார் உட்பட நாங்கள் அனைவரும் பேட்ட படத்தை தியேட்டரில் காண காத்துக் கொண்டிருக்கிறோம்.
நான் சிறு வயதில் இருந்தே ரஜினி சாரோட தீவிர ரசிகன். ரஜினி சார் என்னோட இயக்கத்தில் நடித்திருக்கிறார் என்பதையே இன்னும் என்னால் நம்ப முடியவில்லை இந்த கொண்டாட்டத்தில் இருந்து நான் இன்னும் வெளிவரவே இல்லை. அதனால் அடுத்து ரஜினி சாரோட படம் பண்ண போறதா வதந்திகள் வந்து கொண்டிருக்கிறது. அடுத்த படம் குறித்து நான் இன்னும் யோசிக்கவே இல்லை என்று தெரிவித்தார். இந்த படம் ரஜினிசம் என்றுதான் சொல்லுவேன்.

ரஜினியை வைத்து படம் எடுப்பது என்னுடைய கனவு என்று சொல்லலாம் அது தற்போது நிறைவேறியுள்ளது. அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சிம்ரன், ரஜினி ஜோடி அவ்வளவு அழகாக பொருந்தியிருக்கிறது, மக்களும் இந்த ஜோடியை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்