விளம்பரம்
முகப்புகோலிவுட்

தள்ளிப்போகிறதா கார்த்திக் சுப்புராஜின் ‘மெர்க்குரி?

  | April 06, 2018 10:35 IST
Mercury Movie Release Date

துனுக்குகள்

  • இதில் பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்
  • இதன் ஃபர்ஸ்ட் லுக் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது
  • சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இப்படத்தில் வசனங்களே கிடையாதாம்
‘இறைவி’ படத்திற்கு பிறகு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மெர்க்குரி’. இதில் முக்கிய வேடங்களில் சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன், இந்துஜா ஆகியோர் நடித்துள்ளனர். படத்தில் ‘கிங் ஆஃப் டான்ஸ்’ பிரபு தேவாவுக்கு மிரட்டலான வில்லன் கதாபாத்திரமாம்.

இப்படத்தில் வசனங்களே கிடையாதாம். சைலண்ட் த்ரில்லராக தயாராகியுள்ள இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்டோண் பென்ச் ஃபிலிம்ஸ் – பென் ஸ்டுடியோஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
 
சமீபத்தில், வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ப்ரோமோஷன் பாடல் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. தற்போது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்த ஸ்ட்ரைக் காரணமாக எந்த புதிய தமிழ் படங்களும் வெளியாகாமல் உள்ளது. இதனால், ஏற்கெனவே குறிப்பிட்ட தேதியில் (ஏப்ரல் 13-ஆம் தேதி) இப்படம் தமிழகத்தில் வெளிவராது என்றும், ஸ்ட்ரைக் முடிந்த பிறகே ரிலீஸாகும் என கார்த்திக் சுப்புராஜ் ட்வீட்டரில் தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்