முகப்புகோலிவுட்

பேட்ட கதை எப்போது தொடங்கியது- கார்த்திக் சுப்பராஜ்

  | January 12, 2019 10:45 IST
Petta

துனுக்குகள்

  • நவாசுதீன் சித்திக் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
  • விஜய் சேதுபதி ரஜினிக்கு வில்லனாக நடித்திருக்கிறார்
  • சிம்ரன்,த்ரிஷா, இன்னும் பல நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம்
ரஜினி, சிம்ரன், விஜய் சேதுபதி,சசிகுமார்,த்ரிஷா உட்பட இன்னும் பல நட்சத்திரங்கள் இணைந்திருக்கும் படம் “பேட்ட” . இந்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
 
நேற்று வெளியான இப்படம் நாடு முழுவதும் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தீவிர ரஜினி ரசிகராக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ் ரஜினியை வைத்து படம் எடுக்க வேண்டும் என்பது தன்னுடைய கனவாக நினைத்துக்கொண்டிருந்தார் அந்த கனவு தற்போது நினைவாகி இருக்கிறது.
 
படம் முழுவதும் இது ரஜினிக்காகவே எடுக்கப்பட்ட காட்சிகள் என்று பிரம்மிக்க வைக்கிறார். பேட்ட கதை குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர் பேட்ட கதை எப்போது உருவானது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
 
“மூன்று ஆண்டுகளுக்கு முன்னாடி ரஜினியிடம் இந்த கதையை சொல்லிவிட்டன்.  அப்போது  “கபாலி” அறிவிக்கப்பட்டது. ஆனால் எனக்கான கதையை சொல்லி இருக்கிறீர்கள் நிச்சயமாக நாம் இந்த படத்தை பண்ணுவோம் என்று நம்பிக்கை கொடுத்தார்.
 
அதன் பிறகு “காலா” அறிவித்தார்கள்.  நம்முடைய படம் எடுப்போமா இல்லையா என்று குழப்பத்தில் இருந்தேன்.  அந்த நேரத்தில் எனக்கு நம்பிக்கை கொடுத்தது நண்பர் பாபி சிம்ஹா தான்.
 
ரஜினி சார் கடந்த ஆண்டு தொடக்கத்திலே என்னை அழைத்து மீண்டும் கதையை கேட்டார், கேட்ட உடனே “பேட்ட” டேக் ஆஃப் ஆகிடிச்சி.” என்று நெகிழ்ச்சியாக பேசியிருந்தார்.  
 

மேலும் படிக்க - “இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது”- உற்சாகத்தில் கார்த்திக் சுப்புராஜ்

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்