முகப்புகோலிவுட்

ஹைதராபாத்தில் பரபரப்பாக படமாகும் கார்த்தியின் ‘தேவ்’

  | July 20, 2018 14:15 IST
Dev Movie

துனுக்குகள்

  • தேவ் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி வருகிறார்
  • ‘கடைக்குட்டி சிங்கம்’ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது
  • இது கார்த்தியின் கேரியரில் 17-வது படமாம்
வினோத்தின் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடித்து சமீபத்தில் தமிழ், தெலுங்கு (சின்ன பாபு) என 2 மொழிகளில் வெளியான படம் 'கடைக்குட்டி சிங்கம்'. பாண்டிராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் புரொமோஷனில் செம பிஸியான கார்த்தி தற்போது, மீண்டும் தனது அடுத்த படமான 'தேவ்' ஷூட்டிங்கில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்த ஷெடியூலில் பிரகாஷ் ராஜ், கார்த்தி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகிறதாம். ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார். இது கார்த்தியின் கேரியரில் 17-வது படமாம்.

முக்கிய வேடங்களில் ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும்,கெஸ்ட் ரோலில் 'நவரச நாயகன்' கார்த்திக் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். ரூ.55 கோடி செலவில் 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை 'ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம் வெளியிடவுள்ளதாம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்