முகப்புகோலிவுட்

உக்ரேனுக்கு செல்லவிருக்கும் கார்த்தியின் ‘தேவ்’ படக்குழுவினர்

  | July 11, 2018 10:53 IST
Dev Movie

துனுக்குகள்

  • இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார்
  • ரூ.55 கோடி செலவில் இப்படத்தை ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது
  • இதன் ஷூட்டிங் 50% நிறைவு பெற்றதாம்
வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கார்த்தி கைவசம் பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ரஜத் ரவிஷங்கரின் ‘தேவ்’ என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘தேவ்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் டூயட் பாடி ஆடி வருகிறார். இது கார்த்தியின் கேரியரில் 17-வது படமாம்.

முக்கிய வேடங்களில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே.விக்னேஷ், அம்ருதா, ரேணுகா ஆகியோர் நடிக்கின்றனர். மேலும்,கெஸ்ட் ரோலில் ‘நவரச நாயகன்’ கார்த்திக் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார், ரூபன் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.

ரூ.55 கோடி செலவில் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ‘ரிலையென்ஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வெளியிடவுள்ளதாம். தற்போது, இதன் ஷூட்டிங் 50% நிறைவு பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக வருகிற ஆகஸ்ட் மாதம் உக்ரேனுக்கு செல்லவிருக்கிறது ‘தேவ்’ டீம்.
    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்