முகப்புகோலிவுட்

கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' மேக்கிங் வீடியோ

  | July 13, 2018 10:58 IST
Kadaikutty Singam Movie

துனுக்குகள்

  • இதில் கார்த்திக்கு ஜோடியாக ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்
  • இதனை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்
  • இப்படம் இன்று தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ளது
வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி நடிப்பில் இன்று (ஜூலை 13-ஆம் தேதி) தமிழ் மற்றும் தெலுங்கில் (சின்ன பாபு) வெளியாகியுள்ள படம் ‘கடைக்குட்டி சிங்கம்’. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ள இப்படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இதில் கார்த்திக்கு ஜோடியாக சயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், சூரி, மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம்.
 

டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் மேக்கிங் வீடியோவை ‘2D’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்