முகப்புகோலிவுட்

'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் 4 நிமிட காட்சி வெளியீடு

  | July 11, 2018 18:43 IST
Kadaikutty Singam Movie

துனுக்குகள்

  • இதில் கார்த்திக்கு ஜோடியாக ட்ரிபிள் ஹீரோயின்ஸாம்
  • இதன் டிரெய்லர் & பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
  • இதனை சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்
வினோத்தின் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி கைவசம் பாண்டிராஜின் ‘கடைக்குட்டி சிங்கம்’ மற்றும் ரஜத் ரவிசங்கரின் 'தேவ்' என இரண்டு படங்கள் உள்ளது. இதில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தை நடிகர் சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக சயிஷா, பிரியா பவானி ஷங்கர், அர்த்தனா என ட்ரிபிள் ஹீரோயின்ஸாம். மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், சூரி, மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி ஆகியோர் நடித்துள்ளனர். சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாராம். டி.இமான் இசையமைத்துள்ள இதற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
 

சமீபத்தில், வெளியிடப்பட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு (சின்ன பாபு) என 2 மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது. படத்தை பார்த்த சென்சார் குழுவினர் கிளீன் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனராம். படத்தை ஜூலை 13-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், படத்தில் இடம்பெறும் 4 நிமிட காட்சியை வெளியிட்டுள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்